Wednesday, February 5, 2025

ஆவடியில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்கள்…வாகன ஓட்டிகள் அச்சம்

ஆவடியில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்களால், வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், பூந்தமல்லி -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் மழைநீர் கால்வாய்கள் மூடப்படாமல் கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், கால்நடைகளும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் குப்பைகளும், நேரடியாக கால்வாயில் செல்வதால் அடைப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news