புதுச்சேரியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம் நடைபெறுகிறது. புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரு டோக்கனுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. ஒரு டோக்கனுக்கு இரண்டு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், டோக்கனுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்ததால், கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
