ஈரானில் தொடரும் தாக்குதல் : பலி எண்ணிக்கை 1,300-ஐ கடந்தது

ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த போரில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1,300-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதன் பின்னணியில், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில், ஈரான் மீது மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து நடைபெறும் இந்த தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது.

Related News

Latest News