Sunday, January 25, 2026

பைக் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி – பேருந்து ஓட்டுநர் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நடந்தை புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவின்குமார் (வயது 30) மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் இருச்சக்கர வாகனத்தில் வசந்தபுரத்திற்கு சென்றுள்ளனர். அதே நேரத்தில் திருச்செங்கோட்டிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பேருந்து ஒன்று பரமத்தி வேலூரை நோக்கி வந்தது.

வசந்தபுரம் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த இருச்சக்கர வாகனம் மீது அந்த தனியார் பேருந்து மோதியது. அதன் பின்னர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு ஆட்டோவின்மீதும் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக சக்திவேல் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்த கவின்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான தனியார் பேருந்து ஓட்டுநர் விக்னேஷ் என்பவரை நல்லூர் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News