Wednesday, December 17, 2025

திமுக எம்.எல்.ஏ வின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). அவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் விவசாய வேலை காரணமாக வயலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சை வந்த திமுக மாவட்ட செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகரின் கார் இருசக்கர வாகனத்தின் மோதியதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே. உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் துரை சந்திரசேகரன் கார் பறிமுதல் செய்யப்பட்டு ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News