தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.111 க்கு விற்பனை செய்யப்படுகிறது.