தென்காசி மாவட்டம், கடையநல்லூர், நகைக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக் கடையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். அந்த மூதாட்டி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த போலி கவரிங் தங்க செயினை எடுத்து வைத்து விட்டு ஒரிஜினல் 32 கிராம் தங்கச் செயினை எடுத்து இடுப்பில் மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் கடையின் உரிமையாளர் தங்கச் செயினை எடை போட்டு பார்த்த பொழுது எடை குறைந்து இருந்ததும் அது கவரிங் நகை என்பதும் தெரியவந்தது. அங்குள்ள சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளதை ஆராய்ந்த பார்த்தபொழுது அதில் மூதாட்டி தான் கொண்டு வந்த போலி கவரிங் நகையை வைத்துவிட்டு ஒரிஜினல் தங்க நகையை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார் மூதாட்டியை தேடி வருகின்றனர்.