Monday, December 22, 2025

வைரலாகும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ‘துணிவு’ ட்வீட்!

சமூகவலைத்தளங்கள் முழுவதும் போர்க்களமாக மாறி, ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படைவீரர்கள் தினமும் போராடி பல hashtagகளை ட்ரெண்ட் செய்து வருவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், அக்டோபர் 1ஆம் தேதி 2014ஆம் ஆண்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் ஒன்று திடீரென வைரல் ஆகி வருகிறது.

காரணம், அதில் அடங்கி இருக்கும் ‘துணிவு’ reference தான். துணிவு இருப்பவனுக்கு துக்கம் இல்லை, துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை என்ற அந்த ட்வீட், தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

கருணாநிதி அவர்களின் பேரனும், தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதியின் நிறுவனமான Red Giant Movies, ‘துணிவு’ படத்தை விநியோகிக்க இருப்பதால், இந்த ட்வீட் சுவாரஸ்யமான குறியீடாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Related News

Latest News