தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையிட்டு வருகின்றனர். குறிப்பாக, கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்ட பணப்பயன் சலுகையை 15 நாட்கள் வரை வழங்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டு வருகிறது.
மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமுறைகள், உடற்கல்வி இயக்குநர்கள் போன்றோரின் சம்பளங்களை மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தேசிய ஓய்வூதியத் திட்டம் அமல் படுத்தப்பட்டது. ஆனால், இதற்கு எதிராக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பழைய ஓய்வூதியம் தோட்டம் தொடர்பாக ஆராய்ந்த இந்த குழு தற்போது அரசு ஊழியர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறது.