Wednesday, December 24, 2025

“ஐயோ நாங்க தோத்துபோய்விட்டோமே”.. கதறி அழும் காதலி.. பறிபோன காதலனின் உயிர்!! என்ன நடந்தது?

“ஐயோ நாங்க தோத்துபோய்விட்டோமே”.. கதறி அழுகும் காதலி.. காதல் விவகாரத்தால் பெண் வீட்டாரின்  வெறிச்செயல்..காதலியின் தாயார் மாற்று சமூகத்தினரா? என்ன நடந்தது? விவரிக்கிறது இந்த தொகுப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அடியாமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் அதே பகுதியில் உள்ள குமார் என்பவரின் மகள் கல்லூரி படிப்பை முடித்த மாலினி என்பவரை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில், மாலினி சென்னையில் ஷாப்பிங் மாலில் வேலை பார்த்து வருகிறார்.இதற்கிடையே, காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில்  அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாலினி வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மாலினியின் குடும்பத்தினர் தங்கள் மகள் மாலினி தங்களுக்கு தேவையில்லை என்று எழுதி கொடுத்து விட்டு சென்றதால் மாலினி வைரமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வைரமுத்துவிற்கும் –மாலினிக்கும் பதிவு திருமணம் சில மாதங்களில் செய்து வைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து மாலினி  நேற்று வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த வைரமுத்துவை வழிமறித்த மர்மநபர்கள்  ஓட ஓட விரட்டிச் சென்று வைரமுத்துவை சராமாரியாக அறிவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. பின்னர் வைரமுத்துவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மாலினியின் சசோதரர்கள் குணால், குகன் சித்தப்பா பாஸ்கர் மற்றும் சுபாஷ், கவியரசன், அன்புநிதி உள்ளிட்டவர்கள் மீது இறந்த வைரமுத்துவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில்  போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுபாஷ், கவியரசன் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள மாலினியின் சசோதரர்கள் குணால், குகன் சித்தப்பா பாஸ்கர் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், காதலியின் தாயார் மாற்று சமூகத்தினர் என்பதால் அவர் மீது எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அரசு மருத்துவமனை அருகே மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

இதக்கிடையே, சென்னையில் இருந்து ஊர் திரும்பிய காதலி மாலினி “முத்து நம்ப தோத்துபோய்விட்டோமா?ஐயோ நாங்க தோத்துபோய்விட்டோம் “என்று கதறி அழுதது காண்போரின் கண்களை கலங்கடிக்க செய்கிறது.

Related News

Latest News