அடடே… அப்போ நகை கடைக்கு கிளம்பலாமா? குறைந்த தங்கம் விலை! சரிவு மேலும் தொடருமா?

சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ரூ.800 குறைந்து 92,800 ரூபாயாக விற்கப்படுகிறது. நேற்று அதாவது நவம்பர் 11ன் தேதி சவரன் ரூ.93,600 ஆக இருந்த நிலையில், இன்றைய குறைவு நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதியை தருவதாக இருக்கிறது.

18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.9,665 ஆகவும், ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ.77,320 ஆகவும் விற்பனையாகிறது. நவம்பர் மாதத்தின் தொடக்கம் முதல் தங்க விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களோடு திருப்பங்களை சந்தித்து வருகிறது. நவம்பர் 10-ஆம் தேதி ஒரே நாளில் இருமுறை உயர்ந்து சவரன் ரூ.91,840 ஆக இருந்தது.

நவம்பர் 11-ஆம் தேதி ரூ.1,760 உயர்வு கண்டு விலை ரூ.93,600 ஆக உச்சத்தைத் தொட்டது. இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்தனர்; ஆனால் இன்றைய குறைவு அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

வெள்ளி விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.173 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,73,000 ஆகவும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலை நிலையானதாக இருந்த நிலையில் இன்றைய உயர்வு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் நிலவரம், டாலர் மதிப்பு மற்றும் பொருளாதார சூழ்நிலை இந்தியாவில் தங்க விலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. திருமண காலம் மற்றும் பண்டிகை காலத்தையொட்டி நகை வாங்குவோர் இன்றைய குறைவைக் கவனித்து தங்கத்தை வாங்க பரிந்துரைக்கப்படுகின்றனர். விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்பதால், வாங்குவோர் விலை நிலவரங்களை கவனித்துக் கொண்டிருப்பது நியாயமானது என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தங்க விலை சர்வதேச சந்தை நிலவரம், டாலர் மதிப்பு மற்றும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், உலக வர்த்தக உயர்வு, டாலர் மதிப்பின் வீழ்ச்சி, பொருளாதார அசாதாரணங்கள், நகை தேவை அதிகரிப்பால் தங்க விலை உயரலாம் என்று கூறப்படுவதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

Related News

Latest News