நீதிமன்றத்தில் ஆஜார் ஆகாமல் அந்தமானில் பதுங்கி இருந்த பாலியல் வன்கொடுமை குற்றவாளியை, தாம்பரம் போலீசார் விமானம் மூலம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரத்தை சேர்ந்த 18 வயது பெண்ணை வன்கொடுமை செய்த புகாரில், கடந்த 2014ம் ஆண்டு கோவிந்தசாமி என்பவரை தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதில், ஜாமினில் வெளியே வந்த கோவிந்தராஜ், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் அந்தமானில் பதுங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி விமானம் மூலம் அந்தமான் விரைந்த தாம்பரம் தனிப்படை போலீசார், கோவிந்தராஜை பிடித்து விமானம் மூலம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
