மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று, நாடு முழுவதும் அதற்கு முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.
அந்தவகையில், அக்டோபர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.95 லட்சம் கோடி வசூலாகியுள்ளன.
செப்டம்பர் மாதத்தில் ரூ. 1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.195.936 கோடியாக உயர்ந்துள்ளது.
