ஓ.பி.எஸ்க்கு தை பிறந்து ‘வழி’ பிறக்கவில்லை, ‘வலி’ தான் பிறந்திருக்கிறது

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் அவருடைய முடிவுக்காக காத்திருந்தனர். ஆனால், அவர் முடிவு எடுப்பதில் தடுமாற்றத்தில் இருப்பதால், ஒவ்வொருவராக வெளியேற தொடங்கி விட்டனர்.

ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்துவிட்டார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து விட்டார். இப்போது, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கமும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்துவிட்டார்.

அடுத்ததாக, ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், குன்னம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோரும் தி.மு.க.வில் இணைய தயாராகி விட்டனர். எம்.எல்.ஏ. அய்யப்பன் மட்டும்தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் உள்ளார்.

“தைப்பிறந்தால் ‘வழி’ பிறக்கும்” என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் கூறிவந்தார். ஆனால், கடைசியில் அவருக்கு ‘வலி’ தான் பிறந்திருக்கிறது என்று, அவரை பிரிந்து சென்ற ஆதரவாளர்களே கூறிவருகின்றனர்.

Related News

Latest News