பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜனவரி 20) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் மீதுள்ள நல்லெண்ண அடிப்படையிலும், மாணவர்களின் நலன் கருதியும், சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், கோரிக்கைகளை அரசு பரிசீலினை செய்து அறிவிப்பு வெளியிடாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
