நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாதுபாப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வரும் காளியம்மாள் தவெக வில் இணைவதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும்நிகழ்ச்சி அழைப்பிதழில் நாதகவின் காளியம்மாளின் பெயர் இடம்பெற்றுள்ளதால் அவர் திமுகவில் இணையலாம் என பேசப்படுகிறது. இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.