ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த பத்தாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி ஈரோடு மாநகராட்சி தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கடந்த அறுபது ஆண்டுகளாக திராவிட ஆட்சிகளால் விவசாயிகள் நெசவாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது
மக்களின் தேவைகளை எடுத்துச் சொல்வதற்கும் அதனை சட்டமாக சட்டமன்றத்தில் இயற்றுவதே எனது நோக்கம். தற்போது மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படும் ஈரோடு புற்றுநோய் மாநகரமாக மாறி உள்ளது
ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லை நடைபாதைகள் இல்லை மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எங்கு உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் பேசாமல் பதாகைகள் வைத்து பிரச்சாரம் செய்தால் கூட வழக்கு பதிவு செய்கின்றனர். பெரியார் சொல்லாததை சீமான் எதுவும் சொல்லவில்லை இந்த மண்ணுக்கு தேவையான விஷயங்களை தான் சீமான் பேசி வருகிறார்.
தொடர்ந்து சின்னம் தொடர்பான தகவல் தெரிவித்த அவர் வரும் 20ஆம் தேதி சின்னம் உறுதி செய்யப்பட்டதும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.