அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் ஏற்பாடுகள் தற்போதே அனைத்து கட்சிகளும் தொடக்கி விட்டனர், கூட்டணி குறித்து ஆலோசனை, பிரச்சாரம்,கட்சி கூட்டம் என அதிதீவிரமாக அனைவரும் களமிறங்குகின்றனர்,இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் யாருடனும், கூட்டணி கிடையாது, அவரது தனித்துவமான மேடைப்பேச்சும், அவரது தனித்துவமான கொள்கையாலும் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது வருகிறார்.
ஆனால், அண்மை காலமாக சீமான் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை விட்டுவிட்டு புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம், அதனின் தொண்டர்கள், கட்சியின் தலைவர் விஜய் என ஒட்டுமொத்தமாக விஜய் கட்சியை டார்கெட் செய்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது ஒன்றாகும்.
குறிப்பாக விஜய் தொண்டர்களை அணில் கூட்டம் என்று கூறுவது, தற்குறி கூட்டம் என்று விமர்சிப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.மேலும் சீமான் செல்லும் இடமெல்லாம் விஜய்யையும் தவெக-வினரையும் தாக்கி பேசி வருகிறார். அந்த வகையில் அண்மையில் விஜய், திருச்சிக்கு வந்திருந்தபோது அவரைக் காண லட்சக் கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்ததைப் பற்றி சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அஜித் வந்தால் இதைவிட அதிக கூட்டம் வந்திருக்கும் என கூறி இருந்தார்.
அதுமட்டுமின்றி, உன்னை யார் அரசியலுக்கு வரச் சொன்னது என கேள்வி எழுப்பிய சீமான், எம்ஜிஆரைப் போல ஆகிவிடலாம் என நினைக்க வேண்டாம். அவர் ஒன்றரை மணி நேரம் கூட எழுதி வைத்ததை பார்க்காமல் பேசுவார். அதேபோல் விஜயகாந்த் மனதில் பட்டதை மக்கள் மொழியில் பேசுவார். ஸ்டாலின் கூட சின்ன பேப்பரை வைத்து தான் படிப்பார். ஆனால் விஜய் பெரிய பேப்பரில் எழுதிக் கொண்டு வந்து, அதை மக்கள் முன்னிலையில், ஒப்பிக்கிறார் என்று விமர்ச்சித்தர். மேலும் பேசிய,சீமான், அஜித்தும், ரஜினிகாந்தும் தங்களுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை என புகழ்ந்து பேசினார்.
இப்படி விஜய்யை மட்டம்தட்டி பேசும்போதெல்லாம், அஜித்தை உயர்த்தி பேசி வரும் சீமான், பழைய மேடைப் பேச்சு ஒன்றில் அஜித் ரசிகர்களை காரி துப்பி இருக்கிறார். அதில் அவர் பேசியதாவது : “சில தருதலைகள் அஜித்தை தல…. தலனு சொல்லிக்கிட்டு இருக்கான். வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு சுவரொட்டியை பார்த்தேன். அதில் கடவுளே வா… காத்திருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம் என போட்டிருக்கிறான். நாங்கெல்லாம் அதை கூட்டி பெருக்கி முறவாசல் செய்யவா உக்காந்திருக்கோமாடா நாய். அயோக்கிய பயலுகளா, இவனுங்களையெல்லாம் ஏறி மிதிக்க ஒரு ஆள் இல்லாம, ஆளாளுக்கு பேசிகிட்டு திரியுறான். இவங்கள பூட்டி வச்சு கொளுத்திடனும்” என பேசி இருக்கிறார்.
அஜித் ரசிகர்களை தாக்கி சீமான் பேசிய வீடியோவை விஜய் ரசிகர்கள் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறார்கள். இது குறித்து நெட்டிசன்கள், சீமானும், அவரின் தம்பிகளும் வம்புக்கு இழுக்காதே ஆட்களே இல்லை. இணையத்தை கடைந்தெடுத்தால் நொடிக்கொன்றாய் சிக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதே போன்று ரஜினியையும் விமர்ச்சித்த சீமானை நடிகர் ராகவா லாரன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய லாரன்ஸ், “சீமானின் பேச்சுகள் ஏதோ அவர் மட்டும் தான் தமிழ் தாய்க்கு பிறந்தவர் போன்றும், மற்றவர்கள் அனைவரும் அமெரிக்கருக்கு பிறந்தவர் என்பது போல் பேசுகிறார். இது மிகவும் வருந்தக்கூடிய செயல். இதனை அவர் தொடர்ந்து செய்யக் கூடாது.அரசியல் என்பது ஓட்டப்பந்தயம் போன்றது. பந்தய ரேசில் அனைவரும் ஓடி அதில் வெற்றிபெறும் நபர் தான் உண்மையான ஆண்மகன். ஆனால் யாருமே ஓடக்கூடாது. நான் மட்டும் தான் ஓடுவேன், நானே ஓடி, நானே வெற்றி பெறுவேன் என்று சொல்வது என்ன மனநிலை? நீங்கள் ஓட்டுக்காக பேசுகிறீர்கள் நான் ரஜினி ரசிகன், நாட்டுக்காக பேசுபவன். யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் அவர்களை வரவேற்று அரவணைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
