Wednesday, April 2, 2025

பென்ஷன் பணம் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ் : மத்திய அரசு கொண்டுவரப்போகும் புதிய திட்டம்

மத்திய அரசு, ஓய்வூதியத் திட்டங்களில் ஏற்படும் புகார்களை விரைவாகத் தீர்க்கும் நோக்கத்தில், புதிய ஒழுங்குமுறை மன்றத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்த மன்றம், தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) போன்ற பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை ஒருங்கிணைத்து, அவற்றின் செயல்பாட்டை எளிமையாக்கும். இதன் மூலம், ஓய்வூதியப் பெறுபவர்கள் தாமதமின்றி, சிக்கலின்றி அவர்களுக்கான பணத்தைப் பெற முடியும்.

தற்போது, EPFO இன் கீழ் செயல்படும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS), மாத சம்பள வரம்பு ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியாமல் உள்ளனர். இந்தப் புதிய மன்றம், இத்தகைய வரம்புகளை மறுபரிசீலனை செய்து, அனைவருக்கும் ஓய்வூதிய பாதுகாப்பை வழங்கும் வகையில் செயல்படும்.

மத்திய அரசு உருவாக்க இருக்கும் மன்றம், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டங்களை ஒரு ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, அவற்றின் செயல்படுத்தலை எளிதாக்கும் என எதிர்பார்ப்படுகிறது.

Latest news