‘கூகுள் Vids’ சூப்பர் அறிவிப்பு : இனி எல்லோரும் இலவசமாக AI வீடியோக்களை உருவாக்கலாம்

கூகுள் நிறுவனம் தனது Google Vids தளத்தை இனி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த Vids தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய Veo 3.1 மாடல் மூலம், பயனர்கள் ஒரு Prompt-ஐ டைப் செய்வதன் மூலம் அல்லது ஒரு புகைப்படத்தை பதிவேற்றுவதன் மூலம் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ கிளிப்புகளை உருவாக்க முடியும்.

கூகுள் கணக்கு வைத்துள்ள அனைவரும் மாதத்திற்கு 10 வீடியோக்கள் வரை முற்றிலும் இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம். இது இந்தியாவில் உள்ள YouTube யூடியூபர்கள், Instagram ரீல்ஸ் உருவாக்குபவர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக விளம்பர வீடியோக்கள் அல்லது பிறந்தநாள் வாழ்த்து வீடியோக்களை உருவாக்க இது சிறந்த தேர்வாகும்.

மேலும், காப்புரிமை சிக்கல்கள் இல்லாத இசையை Lyria 3 கருவி மூலம் நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். 30 வினாடிகள் முதல் 3 நிமிடங்கள் வரை உங்கள் தேவைக்கேற்ப இசையை அமைக்க முடியும்.

நீங்கள் கேமரா முன் வர விரும்பவில்லை என்றால், AI Avatars-ஐ உருவாக்கி, அவற்றை பயன்படுத்தி பேசும் வீடியோக்களையும் உருவாக்கலாம். அவற்றின் தோற்றம், பின்னணி மற்றும் பேச்சு முறை ஆகியவற்றை முழுமையாக தனிப்பயனாக்க முடியும்.

வீடியோ உருவாக்கம் முடிந்ததும், அதை தனியாக பதிவிறக்கம் செய்யாமல் நேரடியாக YouTube-இல் பதிவேற்றவும் வசதி உள்ளது.

இந்தியாவில் வீடியோ உள்ளடக்க உருவாக்குநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த இலவச சேவை பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Related News

Latest News