நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திரையரங்குகளில் அதிகஅளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 200 ரூபாய்க்கு மேல் கட்டணம் இருக்கக் கூடாது என உள்துறை துணைச்செயலாளர் பி.கே.புவனேந்திர குமார் அறிவித்துள்ளார்.
இதற்காக கர்நாடகா திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த எதிர்ப்பை அல்லது ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புவோர், 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.