Monday, December 1, 2025

நவம்பர் மாத ஜி.எஸ்.டி வசூல் – தகவலை வெளியிட்ட நிதி அமைச்சகம்

நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

”கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.70 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 0.7 சதவீதம் அதிகம்.

மொத்த உள்நாட்டு வருவாய் 2.3% குறைந்து ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்தது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த 375 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் இறக்குமதியிலிருந்து கிடைக்கும் வருவாய் நவம்பரில் 10.2% அதிகரித்து ரூ.45,976 கோடியாக உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News