நவம்பர் மாதம் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது

டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், வங்கிகள் தினமும் சில பணிகளுக்காக இயங்குகின்றன. கடன் பெறுதல், அதிகளவு பண பரிவர்த்தனை போன்ற சேவைகள் காரணமாக வங்கிகள் நடப்பு நாட்களில் செயல்படுவார்கள். ஆனால் வார இறுதிகள் மற்றும் பண்டிகை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

நவம்பர் 2025 வங்கி விடுமுறை விவரங்கள்

  • நவம்பர் மாதத்தில் சுமார் 9 முதல் 10 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.
  • சில மாநிலங்களில் உள்ளூர் பண்டிகைகளின் காரணமாக கூடுதல் விடுமுறைகள் இருக்கும்.

முக்கிய நாட்கள்:

  • நவம்பர் 1 – பெங்களூரு: கன்னட மாநில தினம், தெஹ்ராடூன்: Igas Baghwal கொண்டாட்டம் – வங்கிகள் மூடப்படும்.
  • நவம்பர் 2 – ஞாயிறு கிழமை – நாடு முழுவதும் விடுமுறை.
  • நவம்பர் 5 – புதன்கிழமை – குருநானக் ஜெயந்தி – நாடு முழுவதும் விடுமுறை.
  • நவம்பர் 7 – வெள்ளிக்கிழமை – ஷில்லாங் பகுதி: வாங்கலா திருவிழா; அசாம் மற்றும் மேற்கு வங்கம்: சத் பூஜை – தனி விடுமுறைகள்.
  • நவம்பர் 8 – இரண்டாவது சனிக்கிழமை – நாடு முழுவதும் விடுமுறை.
  • நவம்பர் 9, 16, 23 – ஞாயிறு கிழமைகள் – நாடு முழுவதும் விடுமுறை.
  • நவம்பர் 22 – நான்காவது சனிக்கிழமை – விடுமுறை.

தமிழ்நாடு வங்கி விடுமுறை நாட்கள்

  • நவம்பர் மாதத்தில் பெரிய பண்டிகைகள் இல்லை.
  • வழக்கப்படி சனி, ஞாயிறு நாட்களில் விடுமுறை.
  • விடுமுறை நாட்கள்: நவம்பர் 2, 8, 9, 16, 22, 23, 30.

இந்த விடுமுறைகளை மனதில் வைத்து உங்கள் வங்கி தொடர்பான பணிகளை முன்னதாக சமாளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

Related News

Latest News