Wednesday, July 2, 2025

தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் : இளையராஜாவால் அஜித் படத்திற்கு வந்த சிக்கல்

இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படத்தில் “இளமை இதோ இதோ” உள்ளிட்ட இளையராஜா இசை அமைத்த பல்வேறு பாடல்கள் பயன்படுத்தபட்டுள்ளது.

இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ.5 கோடி கேட்டு படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ.5 கோடி தராவிட்டால் வழக்கு தொடருவேன் எனவும் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news