Saturday, December 27, 2025

டெல்லி மட்டுமல்ல, மொத்தம் 4 நகரங்கள் குறிவைப்பு! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

டெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை காரின் வெடிகுண்டு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், 13 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியது மருத்துவர் உமர் என்பதை விசாரணை அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில், என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய விசாரணையில், மொத்தம் 4 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த உமர் மற்றும் குழுவினர் திட்டமிட்டிருந்தது தெரியவந்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 8 பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து 4 நகரங்களைக் குறிவைத்து, ஒரே நேரத்தில் கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை நடத்துவதற்காக ரூ. 20 லட்சம் நிதி திரட்டியதும், 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News