‘No Shave November’ல இவ்ளோ நல்ல விஷயம் இருக்கா! இது தெரியாம போச்சே…

289
Advertisement

நவம்பர் வந்து விட்டாலே பல ஆண்கள் தாடியும் மீசையுமாக வலம் வருவதை பார்க்க முடியும். இன்ஸ்டாகிராம், facebook, ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களிலும் no shave november hashtag ட்ரெண்ட் ஆவது வழக்கம்.

ஆனால், ஸ்டைல் தொடர்பான ட்ரெண்டாக பார்க்கப்படும் No Shave November உண்மையில் ஒரு விழிப்புணர்வுக்காக தொடங்கப்பட்டது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் பகுதியை மையமாக வைத்து செயல்படும் மொவம்பர் (Movember) என்ற தன்னார்வ அமைப்பினர், cancer குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே, No Shave November ட்ரெண்டை தொடங்கினார்கள்.

மாதம் முழுவதும் ஆண்கள் தங்கள் தாடி மற்றும் மீசையை வளர்த்து, புற்றுநோயால் தலைமுடி உதிர்வை சந்திக்கும் நோயாளிகளுக்கு தங்கள் முடியை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம். பெண்களும் தங்கள் தலைமுடியை வளர்த்து வழங்குவது வரவேற்கப்படுகிறது.

cancer நோயை பற்றிய விழிப்புணர்வுப் பணியை பிரதானமாக செய்யும் இந்த அமைப்பினர், ஆண்களின் மனநலன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.