இயற்கையாக தோன்றும் வடிவங்களும் வண்ணங்களும் தான் காலந்தொட்டே மனிதனின் ரசனையை மெருகேற்றி படைப்பாற்றலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
வாசனை வீசும் வித விதமான வண்ண மலர்களை விரும்பாதவர்களே இருக்க முடியாது.
அதிலும், நதியில் உள்ள பனிக்கட்டிகளே பூக்களாக மலர்ந்துள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா? தென் கிழக்கு சீனாவில் உள்ள சோங்குவா நதியின் புகைப்படம் ஒன்றை நார்வே நாட்டின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நதியின் நடுவே உறைந்து நிற்கும் பனி, பூக்கள் வடிவத்தில் செதுக்கியது போல காட்சியளிக்கும் இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூரிய ஒளி பனிக்கட்டிகளில் பட்டு பிரதிபலிக்கும் போது, Iceflowers என அழைக்கப்படும் பனிப்பூக்களின் அழகு கண்களை கொள்ளை கொள்ளும் இயற்கை அதிசயங்களில் ஒன்று என சொன்னால் மிகையாகாது. குறிப்பிட்ட கால நிலை சூழலில் மட்டுமே இது போன்ற பனிப்பூக்கள் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.