சென்னை அம்பத்தூரில், கஞ்சா மற்றும் ஹெராயின் போதை பொருட்கள் ரயில் மூலம் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயிலில் பயணம் செய்த மேற்குவங்கத்தை சேர்ந்த மொஜாமெல் ஹகு என்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கூலி தொழிலாளியான இவர், மேற்குவங்கத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வாங்கி வந்து, அம்பத்தூரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதை அடுத்து, இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 9 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர் மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.விசாரணை செய்து வருகின்றனர்.