கோவையில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 65 வயது மூதாட்டியான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீடு அருகே கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. அங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வடமாநில தொழிலாளர்கள், மூதாட்டி என்றும் பாராமல் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது மூதாட்டியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வடமாநில தொழிலாளர்கள் 3 பேரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.