வடகொரியாவின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். அதிபர் கிம் ஜாங் உன்-ஐ வெளியில் காண்பது அரிதாகும். மேலும், வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதும் அரிது.
இந்நிலையியல் இன்று கிம்ஜாங் உன் சீனா சென்றடைந்துள்ளார். நேற்றிரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்டு சீனா சென்றுள்ளார். சீனாவில் நடைபெறும் ராணுவ அணுவகுப்பில் கலந்து கொள்வதற்காக குண்டு துளைக்காத பிரத்யேக ரயில் மூலம் சென்றுள்ளார்.