Wednesday, March 12, 2025

அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல் : அறிமுகம் செய்த வடகொரியா அதிபர்

வடகொரியாவில் அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பலை அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் அறிமுகம் செய்து வைத்தார்.

வடகொரியாவில் 70ல் இருந்து 90 நீர்மூழ்கி கப்பல்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் அவை பெரும்பாலும் டார்பிடோக்கள், கண்ணிவெடிகளை மட்டுமே ஏவும் திறன் கொண்டவை. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வடகொரியாவில் நடந்த மாநாட்டில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “அமெரிக்காவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் அறிமுகப்படுத்தப்படும் என திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தற்போது அதனை நிஜமாக்கும் முயற்சியாக அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை வடகொரியா அறிமுகம் செய்துள்ளது. இது 6 ஆயிரம் டன் முதல் 7 ஆயிரம் டன் வரை எடை கொண்டதாக உள்ளது. வடகொரிய அதிபரின் விபரீத முடிவுகளால் மூன்றாம் உலகப்போர் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெரும்பான்மையான விமர்சங்கள் முன்வைக்கப்படுகிறது.

Latest news