2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. கடந்த அக்டோபர் 06 தேதி முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 07ம் தேதி, 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 08ம் தேதி வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,நேற்று அக்டோபர் 09ம் தேதி,இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று 2025ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது நோபல் பரிசு தெரிவுக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பல போர்களை நிறுத்தியிருக்கிறேன், எனவே, அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவந்த நிலையில், அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. இது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறலாம்.
