ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வந்ததுமே பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. அங்கு பல குடும்பங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில், ஒரு சில நாள்களுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பெண்களை அவர்களது உறவினர்களான தந்தை, சகோரதரன், கணவர், மகன் மட்டுமே தொட வேண்டும் என்றும், மற்ற ஆண்கள் யாரும் தொடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் பெண்களை தூக்க உதவியின்றி வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
தலிபான் அரசின் அடக்குமுறையால் இடிபாடுகளுக்குள் பல பெண்கள் உயிரோடு சமாதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.