Monday, February 3, 2025

ராமர் சாமியும் வேண்டாம், ராமசாமியும் வேண்டாம் – சீமான் பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் இன்று பேசிய சீமான் : எங்களுக்கு ராமர் சாமியும் வேண்டாம், ராமசாமியும் வேண்டாம். பெரியாரால் இந்த நிலத்தில் எதுவும் நடக்கவில்லை. தமிழ்மொழியை சனியன் என்று சொன்ன சனியனை ஒழிக்க வேண்டும் என அவர் பேசியுள்ளார்.

Latest news