Saturday, May 3, 2025

“யாரும் என்னை பின்தொடர வேண்டாம்” – விஜய் பேட்டி

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று மதுரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. விஜய் வருகையை எதிர்பார்த்து மதுரை விமானநிலையத்தில் ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் காலையில் இருந்து காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் : நான் ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக செல்கிறேன். யாரும் என்னை பின்தொடர வேண்டாம். மதுரை மக்கள் அன்பிற்கு நன்றி. வேறொரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.

Latest news