பல கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இனி யூபிஐ வசதி கிடையாது, பணமாக மட்டும் கட்ட வேண்டும் என்ற அறிவிப்புகளை தங்கள் கடைகளில் வைக்கத் தொடங்கியுள்ளன.
இதற்கு என்ன காரணம் என்றால், இப்போது யு. பி.ஐ வந்துவிட்டதால் சிறு, குறு கடைகள் வைத்திருப்பவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என எளிதாக கண்டுபிடித்துவிட முடிகிறது. இதன் காரணமாக தற்போது சிறு, குறு கடைகளில் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ மூலம் வருமான வரித்துறையினர் பல கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கி உள்ளனர்.
இந்த வரி விதிப்பை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் குறைந்துள்ளன. ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய்க்கு மேல் யுபிஐ மூலம் வருமானம் இருந்தும் ஜிஎஸ்டி செலுத்தாத வணிகர்களுக்கு கர்நாடக வணிக வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதன் காரணமாக சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்க தயக்கம் காட்டி வருகின்றனர். சிலர் QR குறியீடு ஸ்டிக்கர்களை கடைகளில் இருந்து அகற்றியும் உள்ளனர்.