வாக்காளர் அட்டையில் ‘இனிஷியல்’ இல்லையா? இது புது சிக்கல்!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி முதல் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத வீடுகளுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இணையதளத்தில் ஆன்லைன் முறையிலும் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

பொதுவாக தமிழகத்தில் ஆதார் அட்டையில் ஒருவரது பெயருடன் ‘இனிஷியல்’ அல்லது தந்தை பெயரும் முழுமையாக சேர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் வாக்காளர் அட்டையில் முதல் பெயர் மட்டுமே இருக்கும். அவருடைய ‘இனிஷியல்’ சேர்க்கப்பட்டு இருக்காது. தந்தை பெயர் அதற்கு கீழ் தனியாக இருக்கும். இந்த பிரச்சனை தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் உள்ளது.

வடமாநிலங்களில் ஆதாரில் ‘இனிஷியல்’ போட மாட்டார்கள். தந்தை மற்றும் சாதி பெயரை சேர்த்து மொத்தமாக இருக்கும். அல்லது தங்கள் பெயர் மட்டுமே இருக்கும். அதேபோலதான் வாக்காளர் அடையாள அட்டையிலும் தங்களது பெயர் மட்டுமே இருக்கும். எனவே இந்த பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Related News

Latest News