சமூகத்தில் பலரும் வங்கிக் கடன் பெற முயலும்போது, ‘உங்களிடம் Credit Score இல்லை’ என்ற காரணம் சொல்லி மறுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி அதாவது RBI புதிய விதிமுறைகளின் படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ஒருவரிடம் credit score இல்லை என்ற காரணத்தைக் கொண்டு மட்டும் loan மறுக்க முடியாது என்று தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
Credit Score என்பது, முன்பு எத்தனை முறை கடன் பெற்றார், அதை எவ்வாறு திருப்பிச் செலுத்தினார், நிலுவை எவ்வளவு உள்ளது போன்ற விவரங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆனால், புதிதாக கடன் பெற முயலும் ஒருவர் அல்லது இதுவரை எந்தவித கடனும் பெறாத ஒருவர் இயல்பாகவே score இன்றி இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு loan மறுக்காமல், அவர்களின் வேலை, மாத வருமானம், சொத்து நிலை, வங்கி கணக்கு பரிவர்த்தனை போன்ற பிற விவரங்களை வைத்து வங்கிகள் முடிவு செய்ய வேண்டும். இது புதிய கடன் வாங்குவோருக்கு மிகப் பெரிய நிம்மதி அளிக்கும் விதிமுறையாக கருதப்படுகிறது.
மேலும், இந்தச் சட்டம் சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கும், முதன்முதலாக வீடு அல்லது கல்விக்கடன் பெற விரும்புவோருக்கும் மிகுந்த பயனளிக்கும். வங்கிகள் எளிதாக ‘Credit score இல்லை’ என்ற காரணம் சொல்லி தவிர்க்க முடியாது என்பதால், அதிகமானோர் கடன் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
மொத்தத்தில், RBIயின் இந்த விதிமுறை பொதுமக்களுக்கு சமமான வாய்ப்பை உருவாக்குவதோடு, வங்கிகளின் பொறுப்பையும் அதிகரிக்கச் செய்கிறது.
