சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி தரவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 63 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.