இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே தொடர்கிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பிஐ ஆளுநர், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. வங்கிகள் தரும் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ரெப்போ ரேட் விகிதம் 5.5சதவீதம் ஆகவே தொடரும்.
இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பிப்ரவரி முதல் 3 முறையாக ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்றார்.