இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி கடந்த 7-ந்தேதி இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரியை விதித்தார். இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது.
இந்நிலையில் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, ரஷ்ய அதிபர் புதின் நேற்று சந்தித்து பேசினார். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மேலும் கூடுதலாக வரி விதிக்கப்படலாம் என அமெரிக்க தெரிவித்திருந்த நிலையில் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.