மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது.
தற்போது மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் எம்எல்ஏ அப்துல் நசீர் மட்டுமே உள்ளார். அவர் இனி எதிர்க்கட்சியாக செயல்படுவார் என்று நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூரில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை(37 எம்எல்ஏக்கள்) உள்ளது. ஒரு எம்எல்ஏவுக்கான ஆதரவு மட்டும் திரும்பப் பெறுவதால் பாஜக அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனினும் இது ஒரு முக்கிய அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.