Saturday, December 20, 2025

ஹிஜாபை இழுத்துப் பார்த்த நிதிஷ் குமார்., வேலையை உதறிய பெண்

பீகார் தலைநகர் பாட்னாவில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். இதில் ஆயுஷ் மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பணி நியமன ஆணை பெறவந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை நிதிஷ்குமார் கழற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெண் மருத்துவர் நுஸ்ரத் தனது பணியை ராஜினாமா செய்தார். இந்த மாதம் 20 ஆம் தேதி அவருக்கு பணியில் சேர நியமனக் கடிதம் கிடைத்ததாகவும், ஆனால் அவர் பணியில் சேரவில்லை என்றும் அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Related News

Latest News