Saturday, December 27, 2025

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

நடந்து முடிந்த பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். அவர் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஆளுநரிடம் கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதலமைச்சர் பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

வருகிற 20-ந் தேதி நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

Related News

Latest News