நித்தியானந்தா தற்போது இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. எப்போதும் சர்ச்சையில் சிக்கும் சாமியார்களில் ஒருவரான நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. நித்தியானந்தாவின் சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் இந்த தகவலை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
இது உண்மையா என தெரியவில்லை. ஒரு வேளை வழக்குகளில் இருந்து தப்பிக்க இது போல் நாடகத்தை நித்தியானந்தாவும் அவருடைய சீடர்களும் நடத்துகிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.