சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன் குமார், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், நிகிதா அஜித்குமார் மீது பொய் புகார் அளித்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.