தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியதில் தொடர்ந்து மழை பெய்தது. குறிப்பாக டெல்டா, தென்கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது.
டிசம்பர் மாதம் வானிலை பொதுவாக மழைப்பொழிவானதாக இருக்கும். ஆக மாதத் தொடக்கத்தில் வந்த டிட்வா புயல், தமிழகத்தில் ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பள்ளிகள் 3 நாட்களுக்கு மூடப்பட்டன.
இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: எதிர்மறை இந்திய பெருங்கடல் இருமுனை நிகழ்வு தற்போது வலுகுறைய துவங்கியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் லாநினா அமைப்பு முழுமையாக ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. லாநினா, எதிர்மறை IOD, கடல் வெப்பநிலை, கடல் சார்ந்த அலைவுகளின் சாதகமான நிலைகள் டிசம்பர் மாதத்தில் இயல்பிற்கு அதிக மழைப்பொழிவிற்கு வழி வகுக்கும் என தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 10 முதல் 12 வரை காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் படி உள்ளது. மேலும் 15 ஆம் தேதி பிறகு தொடர்ச்சியான காற்றழுத்த தாழ்வுகள் உருவாகி, 15 முதல் 21 தேதிகளுக்குள் மழை இன்னும் தீவிரமாகும்.
ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திற்குள், வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு மேலும் இரண்டு வலுவான வடகிழக்கு பருவமழை சுற்றுகள் ஏற்பட்டு நல்ல மழையைக் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
