சீனாவின் குயாண்டா ஏரியின் உள்ளே, கடந்த வருடம் அந்நாட்டு சுற்றுலாத் துறை வடிவமைத்த அதிநவீன தொழில்நுட்பங்களுடன் ஆயிரம் தீவு ஏரி என்ற பொழுதுபோக்கு தலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது.
Underwater Ancient City, Romance Of the Four Seasons போன்ற கருப்பொருள்களுடன் இயங்கும் இந்த இடத்திற்கு வரும் மக்களுக்கு துவக்கம் முதல் முடிவு வரை பல surpriseகள் இருந்து கொண்டே இருக்கிறது.
Virtual Realityஇன் அடுத்தகட்ட பரிணாமங்களை பயன்படுத்துவதால், கேட்கும் ஓசையையும் பார்க்கும் காட்சிகளையும் இணைத்து வெறும் கண்ணால் 3D effectsஇல் காணும் உணர்வை பெறுவது சாத்தியமாகிறது.
Time Tunnel Project என அழைக்கப்படும் இந்த இடம் கலாச்சாரம், கலை மற்றும் வியக்க வைக்கும் தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த சுற்றுலா அனுபவத்தை உறுதி செய்யும் என சீன சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.