Friday, December 26, 2025

செங்கல்பட்டில் புதிதாக திறக்கப்பட்ட ஆதார் சேவை மையம்

செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆதார் சேவை மையம் திறப்பு விழா நிகழ்ச்சி எல்காட் ஆதார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரண்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுத்த அய்யனார் கலந்து கொண்டு ஆதார் மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த ஆதார் சேவை மையத்தில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், புகைப்படம் மாற்றுதல், புதிய ஆதார் அட்டை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தொடங்கப்பட்டதால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News