அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதில் விசாக்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசாவில் கட்டுப்பாடுகளை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு மாணவர்கள், தொழிலாளர்கள், வெளிநாட்டு ஊடக பிரதிநிதிகளுக்கான விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படும் கால அளவு கட்டுப்படுத்தப்படும்.
இந்த புதிய விதியை உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை முன்மொழிந்து உள்ளது. சட்டவிரோதமாக தங்குபவர்களை கண்டு பிடிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் இந்த மாற்றம் தேவை என்று உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.